தீபாவளி பரிசு.. பிரதமர் இ பஸ் சேவையில் 100 பேருந்துகள்.. கலக்கும் மகாராஷ்டிரா அரசு.. தமிழக அரசின் முடிவு
என்ன நாசிக் நகரில் 100 இ பேருந்துகளை இயக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
தீபாவளி பரிசாக தீபாவளிக்கு முன்பே மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளதுமத்திய அரசின் பிரதமர் இ பஸ் சேவை திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10 ஆயிரம் பேருந்துகளை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காற்று மற்றும் ஒலி மாசை குறைக்கும் வகையில் மத்திய அரசு இ பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
இதற்கான ஒப்புதல் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சரவை வழங்கியதுஇதற்காக நாடு முழுவதும் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உட்பட 35 மாநிலங்களை சேர்ந்த 169 நகரங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
காற்று மாசுபாடு பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில் அவற்றை குறைக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளை பின்பற்றி மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுமத்திய அரசின் இந்த இ பஸ் திட்டத்தின் கீழ் மின்சார பேருந்துகளை வாங்க பல்வேறு மாநில அரசுகளும் விண்ணப்பித்துள்ளன.
அதன்படி உத்தரப்பிரதேச அரசு, 2000 மின்சார பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு உத்தரப்பிரதேச மாநில போக்குவரத்து கழகம் கடிதம் எழுதியுள்ளது. கேரள அரசு 950 பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு பிரதமர் இ பஸ் திட்டத்தின் கீழ் சத்ரபதி சாம்பாஜிநகர் பகுதிக்கு 100 மின்சார பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள், தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பெரிதும் பயன் அடைவார்கள் என கூறப்படுகிறது. போக்குவரத்து நெரிசலில் அதிக நேரம் செலவிடுவதுடன், பேருந்துக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.