தமிழகத்தை மிரட்டும் வானிலை.. ஒரு மணி நேரத்தில் 5 செ.மீ கொட்டி தீர்த்த கனமழை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின.காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்குள் 5 சென்டி மீட்டர் மழை பெய்தது.
இதனால், மேட்டுத் தெரு, மூங்கில் மண்டபம், கீரை மண்டபம், பேருந்து நிலையம், ரயில்வே சாலை என காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின.ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்தில் 3 சென்டி மீட்டர் அளவுக்கு மழை வெளுத்து வாங்கியது. இதனால், திருமுடிவாக்கத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் சாலை குளம் போல காட்சியளித்தது. வாகன ஓட்டிகள் திக்கித் திணறிச் சாலையில் பயணம் செய்த நிலையில், அந்த சாலையோரம் நடந்து செல்பவர்களின் நிலை துயரத்திற்குள்ளானது.
முழங்கால் அளவு தண்ணீரில் எங்கு பள்ளம் இருக்குமோ என்ற பதைபதைப்பில் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் நிலை இருந்தது. காஞ்சிபுரத்தை அடுத்த கரூர் கிராமத்தில் மழையின் போது ஆடு மேய்துக் கொண்டிருந்த முனுசாமி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

image