தண்ணீர் பாட்டில் மூடி வெவ்வேறு நிறங்களில் இருப்பதற்கு என்ன காரணம்..? வைரலாகும் வீடியோ
கடைகளில் விற்கும் தண்ணீர் பாட்டிலின் மூடிகள் வெவ்வேறு நிறங்களில் இருப்பதை நீங்கள் கவனித்தது உண்டா..? அதற்கு ஒரு அர்த்தத்தை தரும் வீடியோ வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் தண்ணீர் பாட்டில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்தியாவில் பிஸ்லரி, அகுவாஃபினா போன்றவை பிரபலமான நிறுவனங்களாகும். இந்த தண்ணீர் பாட்டிலை பெரும்பாலும் குளிர்ச்சியாகவே மக்கள் குடிக்க விரும்புகிறார்கள். இந்த தண்ணீர் பாட்டிலில் சில தனித்துவமான விஷயங்கள் உள்ளன. முக்கியமாக இதன் பாட்டிலின் மூடிகள் வெவ்வேறு நிறங்களில் இருப்பதை நீங்கள் பார்த்துள்ளீர்களா? ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு அர்தத்தை குறிக்கின்றன.

இது தொடர்பாக @aminshaykho என்பவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தண்ணீர் பாட்டிலின் ஒவ்வொரு நிற மூடிக்கும் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். வெள்ளை நிற மூடியாக இருந்தால், பாட்டிலில் உள்ள நீர் பதப்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம். அதுவே கருப்பு நிற மூடியாக இருந்தால், காரம் (ஆல்கலைன்) சேர்க்கப்பட்ட நீர் என்று அர்த்தம். நீல நிற மூடி இருந்தால், நீரூற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீர் என்றும் பச்சை நிற மூடியாக இருந்தால் தண்ணீரில் சுவை சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அர்த்தமாம்.

imageimage