தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? ஆம்னி பேருந்துகள் இயக்கத்தில் அதிரடி மாற்றம்அடுத்த 3 நாட்களுக்கு வடபழனி, தாம்பரம் வழியாக ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக பேருந்துகள் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்துகள் நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் செல்லும் என்றும், ஏற்கனவே பேருந்து முன்பதிவு செய்தவர்கள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏற வேண்டும் என்றும் மேலும் காவல்துறையின் உத்தரவுப்படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது.

image