அடங்கிய ஆம்னி பேருந்துகள்.. தமிழ்நாடு அரசின் மேஜிக்.. உற்சாகத்தில் தீபாவளி பயணிகள்.. என்ன நடந்தது?
சென்னை: தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் நிலையில் ஆம்னி பேருந்துகள் நிர்வாகம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளன. கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ளையடித்ததற்கு எதிராக 119 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கைப்பற்றி சிறைபிடித்துள்ளனர்.

இப்படி அதிகாரிகள் மூலம் சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்கள் சமாதானம் செய்து கொண்டனர்.
தீபாவளிக்காக தற்போது ஊர் திரும்ப 1 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில் இந்த கட்டுப்பாடு வெளியாகி உள்ளதால் மக்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு உள்ளே இயங்கும் தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் எப்போதும் போல இயங்குகின்றன. இதனால் தமிழ்நாடு உள்ளே பயணம் மேற்கொள்வதில் சிக்கல் இல்லை.
ஆம்னி பேருந்துகள்: தமிழ்நாட்டிற்கு உள்ளே ஆம்னி பேருந்துகள் சங்கம்.. அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது. அரசு விதித்த கட்டண பிராக்கெட்டை ஏற்றுக்கொண்டு விட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் முன்பதிவுகளுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் 30% கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது, கூடுதல் கட்டணம் வசூலித்தால் அபராதம் விதிக்கப்படும், புகார் தெரிவிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசும் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு குட் நியூஸ்: தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் நிலையில் ஆம்னி பேருந்துகள் நிர்வாகம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

அரசு நிர்ணயித்த கட்டணத்தில் இயக்கப்பட்டு வருவதாக ஆம்னி பேருந்து சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. உதாரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து செல்ல சாதாரண நாட்களில் 900-1500 வரை கட்டணம் இருக்கும். அதே கட்டணம்தான் இப்போதும் உள்ளது.

அதேபோல் சென்னை டூ கோவை செல்ல சாதாரண நாட்களில் 900-1500 வரை கட்டணம் இருக்கும். அதே கட்டணம்தான் இப்போதும் உள்ளது. பொதுவாக பண்டிகை நாட்களில் இது 3500 வரை கூட செல்லும். ஆனால் தீபாவளி நாட்களில் இந்த முறை ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் நிலையில் ஆம்னி பேருந்துகள் நிர்வாகம் அரசின் முடிவை ஏற்று செயல்பட்டு உள்ளது.

image