பொதுமக்களே எச்சரிக்கை.. தீபாவளிக்கு இப்படி தான் பட்டாசு வெடிக்கனும்.. சென்னை மாநகராட்சி அட்வைஸ்

தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளத

கடைப்பிடிக்க வேண்டியவை :

குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

அங்கிகரிக்கப்பட்ட உரிமையாளர்களிடம் இருந்து மட்டுமே பட்டாசுகளை வாங்க வேண்டும்.

திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்கும் போது சுற்றுப்புரத்தில் எரியக்கூடிய அல்லது எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

பட்டாசுகளை மூடிய கொள்கலனில் சேமித்து வைக்கும்போது சுற்றுப்புரத்தில் எரியக்கூடிய அல்லது எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யவும்.

தீக்காய்களிம்புகள், வாளி நிறைய தண்ணீர் மற்றும் தீயை அணைக்கும் கருவிகளை முதலுதவிக்கு வைத்திருக்க வேண்டும்.

தீப்பிடிக்காமல் இருக்க பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

குழந்தைகள் பெற்றோர்களில் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

காதுகளின் சேதத்தை தவிர்க்க உங்கள் காதுகளில் பருத்தி செருகிகளை வைக்கவும்.

வீட்டு கூரையின் மேற்புரத்தில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் அகற்றப்பட்டாதா என்பதை உறுதி செய்யவும்.

பட்டாசு கொளுத்தும்போது காலணிகளை அணிய வேண்டும்.

மருத்துவ முதலுதவி பெட்டிகளை அருகில் வைத்திருக்க வேண்டும்.

மருத்துவ அவசர உதவிக்கு எண் 108 அழைக்கவும்.

பட்டாசு கழிவுகளை சேகரித்து தனித்தனியாக கோணி பைகளில் வைத்து துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்கவும்.

தவிர்க்க வேண்டியவை :

பட்டாசுகளை கையில் வைத்து வடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மெழுகுவர்த்திகள் எரியும் இடத்தில் பட்டாசுகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

பாதி எரிந்த பட்டாசுகளை ஒருபோதும் வீசாதீர்கள். அவை எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களின் மீது விழுந்தால் தீப்பற்ற கூடிய அபாயம் உள்ளது.

வாகனங்களுக்கு அருகில் பட்டசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

பட்டாசுகள் வெடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால், அவற்றை சேதப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள்ளும் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுடன் கூடிய பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

பட்டசு கழிவுகளை வீடுகளில் உள்ள ஈரமான அல்லது உலர் கழிவுகளுடன் சேர்க்க வேண்டும்.

பட்டசு கழிவுகளை மாநகராட்சியால் பராமரிக்கபடும் குப்பை தொட்டிகளில் கொட்டக்கூடாது.

பாதுகாப்பாண தீபாவளி பண்டிகையை கொண்டாட, பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

image