அரசின் உத்தரவை மீறி பல தனியார் பள்ளிகள் இன்று திறப்பு.. விதியை காற்றில் பறக்கவிட்ட துணிச்சல்!
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பள்ளிகள் திறப்பை தள்ளி வைத்த நிலையில், பல தனியார் பள்ளிகள் இந்த அறிவிப்பை மதிக்காமல் வகுப்புகளை இன்று தொடங்கி இருக்கின்றன.
சென்னை: தமிழக அரசின் உத்தரவை மீறி தமிழகத்தில் உள்ள பல தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது பொதுமக்கள், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் வகுக்கும் விதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் துணிச்சலை தனியார் பள்ளிகளுக்கு யார் வழங்குகிறார்கள் என்றும் பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
