மெட்ரோ டிக்கெட் வெறும் ₹5 தான்.. சென்னைவாசிகள் கவனத்திற்கு.!

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை வளர்த்தெடுக்கும் விதமாக இந்த சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது
சென்னை மெட்ரோ ரயில் தனது நிறுவன தினத்தை முன்னிட்டு, ஒரு நாள் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது . அதன்படி, டிசம்பர் 3, 2023 அன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும், பேடிஎம், வாட்ஸ்அப், ஃபோன்பே ஆகியவற்றைப் பயன்படுத்தி இணையதள பயணச்சீட்டு முறை மூலம் (Electronic QR code) பயணிப்பவர்கள் வெறும் 5 ரூபாயில் பயணிக்கலாம்.

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை வளர்த்தெடுக்கவும், ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகையை, டிசம்பர் 13 அன்று ஒருமுறையாக ரூ. 5க்கு பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, ரூ.5 டிக்கெட் பெற்று எங்கு வேண்டுமானாலும் ஒரே ஒரு முறை மட்டுமே பயணம் செய்ய முடியும். அடுத்த பயணம் வழக்கமான டிக்கெட் முறையே பின்பற்றப்படும்.

மேலும், சிங்கார சென்னை பயண அட்டை, பயண அட்டை, மெட்ரோ நிர்வாகத்தின் செயலி மூலம் இயங்கும் மதிப்புக் கூட்டு பயண அட்டை, காகித QR ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் இந்த சலுகையைப் பெற தகுதியில்லை என்றும் தெரிவித்துள்ளது.

image