பாத்திரம் கழுவாம இருந்தா அபராததெற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாண அரசாங்கம், மக்களிடம் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பழக்கத்தை கொண்டு வர சில கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமையல் பாத்திரங்களை கழுவாதவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.116 அபராதம் விதிக்கிறது.
படுக்கையை ஒழுங்காக மடித்து வைக்காதவர்களுக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை நன்றாக சுத்தம் செய்யாதவர்களுக்கும் இதே அபராதத் தொகை விதிக்கப்படுகிறது.ம்.. புது ரூல் பிறப்பித்த சீன அரசு!அதேபோல் தரையில் சம்மனமிட்டு உட்கார்ந்து சாப்பிட்டால் ரூ.233 அபராதமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் வீட்டில் எங்காவது சிலந்தி வலைகள் இருந்தால் அதை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதை செய்யாதப்பட்சத்தில் ரூ.58 அபராதமாகும். வீட்டு முற்றத்தில் சிறுநீர் அல்லது மலம் கழித்தால் ரூ.35 அபராதம். நிலைமையின் தீவிரத்தன்மையை பொறுத்து இந்த அபராதத் தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.