மலேசியா போறீங்களா? இந்தியர்களுக்கு விசா சர்ப்ரைஸ் காத்திருக்கு...
டிசம்பர் 1 முதல் ரெடியாருங்கசீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த குடிமக்களுக்கு சிறப்பான சலுகையை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இது சுற்றுலா செல்பவர்கள், வணிகம் தொடர்பாக செல்பவர்கள் உள்ளிட்டோருக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சலுகை குறித்து சற்றே விரிவாக பார்த்து விடலாம்உலக நாடுகள் பலவும் கொரோனாவிற்கு பின்னர் தங்களது பொருளாதாரத்தை படிப்படியாக மேம்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சரிந்து கிடந்த சுற்றுலாவை மீட்டெடுக்க தீயாய் வேலை செய்து வருகின்றன. அந்த வகையில் பல்வேறு நாடுகளை ஈர்க்கும் வகையில் விசா இல்லாத சேவையை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் சீனா மெகா அறிவிப்பை வெளியிட்டு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்ததுவிசா இல்லாத பயணம்
அதாவது, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த குடிமக்கள் சீனாவிற்கு விசா இல்லாமல் வருகை புரியலாம். இது ஓராண்டிற்கு அமலில் இருக்கும் என்று சர்ப்ரைஸ் கொடுத்தது. அதேசமயம் ஓய்வெடுக்க, வணிக ரீதியாக, குடும்பமாக சுற்றி பார்க்க வரும் சாதாரண பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகள் 15 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கி கொள்ளவும் அனுமதி அளித்தது.
