நங்கூரமிட தயாராகும் Cyclone Michaung: சென்னையில் எத்தனை நாள் மழை தெரியுமா? அந்த ஒரு நாள் தீவிரமாமே!
சென்னை: சென்னையில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகும் நிலையில் எப்போதெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து நார்வே வானிலை மைய அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் அதன் கொள்ளளவை எட்டி வருகின்றன.
ஆனால் காற்றழுத்தம் உருவாகி, அது புயல் என அடுத்தடுத்த நிலைகளை அடையவில்லை. உருவான ஒரு மிதிலி புயலும் ஒடிஸாவுக்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் அந்தமான் கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத்தம் உருவாகக் கூடும் என சொல்லப்பட்டது. அதுவும் தாமதமானது
இந்த நிலையில் நாளை உருவாகும் என சொல்லப்படுகிறது. இது புயலாக வலுப்பெற்றால் அதற்கு மிக்ஜாம் புயல் என பெயரிடப்படும். இந்த பெயரை மியான்மர் பரிந்துரைத்துள்ளது. இது டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும். அப்போது கிழக்கு இந்தியா, மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 29ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். 27ஆம் தேதி முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, டிசம்பர் 1ம் தேதி மணிக்கு 90 கி.மீ. வேகத்தை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 27ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நவம்பர் 29ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகம் வரை சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.