1 முதல் 5ஆம் வகுப்பு வரை... அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் நியூஸ்...
ரெடியாகும் டேப்லெட் வசதிதொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாட்டை செய்ய தயாராகி வருகிறது. இது எப்போது பயன்பாட்டிற்கு வரும்? எந்த அளவிற்கு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்? போன்றவை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளனதமிழகத்தில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளில் சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவர் என்று சொல்லப்படுகிறது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சீருடை, உணவு, பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றனகொரோனா கால கற்றல் இடைவெளியை போக்கும் வகையில் "இல்லம் தேடி கல்வி" என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிமுகம் செய்தது.
"எண்ணும் எழுத்தும்" திட்டம் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. மேலும் வரலாற்று சிறப்புமிக்க "காலை சிற்றுண்டி திட்டம்" அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றின் மூலம் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.