சென்னையில் ஒட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள்;
ரூ.269 கோடியில் சென்னையில் ஒட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை உருவாக்க 269 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.ஒட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரயில்களை உருவாக்க, அதற்கான ஒப்பந்தத்தை அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா (Alstom Transport India Limited) நிறுவனத்திற்கு மெட்ரோ நிர்வாகம் வழங்கியுள்ளது.இதற்கான ஒப்பந்தத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குநர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் கையெழுத்திட்டனர்
ஏற்கனவே, 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 946 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து, கூடுதலாக 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரயில்களை வழங்க தற்போது அதே நிறுவனத்துடன் மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த மெட்ரோ ரயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
