நாளை மறுநாள் மிச்சாங் புயல்.. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்..
இந்திய வானிலை மையம் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் மிச்சாங் புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடானதுமேலும் தாழ்வானப் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனிடையே அந்தமான் அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் வங்கக்கடலில் இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று கனமழை வெளுத்த நிலையில் இன்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது

image