செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 6,000 கனஅடியாக அதிகரிப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
அடையாறு கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு குறுஞ்செய்தி…


தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகும். தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர் மட்டம் 22.53 அடியாக உள்ளது. இரவு வினாடிக்கு 2,888 அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 3,098 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,500-ல் இருந்து 6,000 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, திருநீர்மலை மற்றும் அனகாபுத்தூர் நீர் வழி கால்வாய்கள் மூலமாக அடையார் ஆற்றில் சென்று கலக்கும்.

imageimage