ஹைதராபாத் லுலு மால்: சூப்பர் டூப்பர் சினிபோலிஸ் மல்டிபிளக்ஸ்... ஃபர்ஸ்ட் டைம் அனுபவம்... ரெடியான 5 ஸ்கிரீன் மேஜிக்
ஹைதராபாத் நகரில் புதிதாக திறக்கப்பட்ட லுலு மாலில் அடுத்தடுத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பி வரும் நிலையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. சினிபோலிஸ் சார்பில் புத்தம் புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் திறக்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான வளைகுடா நாடுகளில் ரீடெய்ல் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் லுலு குழுமம் இந்தியாவிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, லக்னோ, கோவை உள்ளிட்ட நகரங்களில் லுலு மால், ஹைபர் மார்க்கெட் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளன. இந்த லிஸ்டில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி சேர்ந்து கொண்டது ஹைதராபாத் நகரம். தெலங்கானா மாநிலத்தில் ஐடி துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் முன்னெடுப்பால் குகாட்டுப்பள்ளி பகுதியில் சுமார் 5 லட்சம் சதுர அடியில் மிகவும் பிரம்மாண்டமாக லுலு மால் அமைந்திருக்கிறது.