டிஎன்பிஎஸ்சி செயலாளர் அதிரடி மாற்றம்... வணிக வரித்துறை இணை ஆணையராக நியமனம்!
டிஎன்பிஎஸ்சி (TNPSC) செயலாளர் உமா மகேஸ்வரி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். உமா மகேஸ்வரி தற்போது வணிக வரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து வந்தவர் உமா மகேஸ்வரி ஐஏஎஸ். இந்நிலையில் அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
தற்போது வணிகவரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து வந்தவர் உமா மகேஸ்வரி ஐஏஎஸ். இந்நிலையில் அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது வணிகவரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
தலைவர் பதவி
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கான தமிழக அரசின் பரிந்துரையை ஏற்காத ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். இதனால் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி நியமனத்தில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய செயலாளர் உமாமகேஸ்வரியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திடீர் இடமாற்றம்
உமா மகேஸ்வரி, டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சார்ந்த பல்வேறு முக்கிய பணிகளை கவனித்து வந்த நிலையில், அவர் திடீரென பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.