84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தா சகோதரி வைஷாலி - ஒரே குடுமபத்தில் இரண்டு கிராண்ட் மாஸ்டர்கள் சமீபத்திய தரவுகளின் தரவுகளின்படி, சர்வதேச சதுரங்க வீராங்கனைகளில் 11 வது இடத்திலும், இந்திய சதுரங்க வீராங்கனைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றார்
படிக்கவும் …டு கிராண்ட் மாஸ்டர்கள்இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் என்ற உயரிய அந்தஸ்தை வைஸாலி பெற்றார்.
இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லும் முதல் தமிழ் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் 2023 IV Elllobregat Open போட்டியில் இரண்டு தொடர் வெற்றிகளின் மூலம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்த்தைப் பெற்றார்.
இவருடைய எலோ தரப்புள்ளிகள் 2501.5 ஆகும்14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 12 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலக இளைஞர் சதுரங்க சாம்பியன் பட்டத்தை வைசாலி வென்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் இவர் பன்னாட்டு சதுரங்க மாஸ்டராக (Woman International Master (WIM) )இருந்து வருகிறார்.சமீபத்திய தரவுகளின் தரவுகளின்படி, சர்வதேச சதுரங்க வீராங்கனைகளில் 11 வது இடத்திலும், இந்திய சதுரங்க வீராங்கனைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றார்.
மேலும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லும் மூன்றாவது இந்திய வீராங்கனை இவர் ஆவார். மேலும், 2024 சதுரங்க உலகக் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொள்ள இவர் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சதுரங்க கிராண்ட்மாஸ்ட்டர் பிரக்ஞானந்தா இவரது சகோதரர் ஆவார். உலகத்திலேயே ஒரே குடும்பத்தில் சகோதர - சகோதரிகள் கிராண்ட் மாஸ்டராக இருப்பது பிரக்ஞானந்தா - வைஷாலி என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.
