23 முறை ஃபெயில்: 56 வயதில் எம்எஸ்சி பரீட்சையை பாஸ் செய்த செக்யூரிட்டி கார்டு!
எப்படியாவது முதுகலை பட்டத்தை வாங்கிவிட வேண்டுமென்று 25 ஆண்டுகளாக ராஜ்கரன் முயற்சி செய்து வந்துள்ளார். 23 முறை எம்எஸ்ஸி கணிதம் தேர்வு எழுதி தோல்வி அடைந்தது, 24 முறையாக தேர்ச்சி அடைந்து 56 வயதில் எம்எஸ்சி பட்டதாரியாகியுள்ளார்.
பள்ளி, கல்லூரியின் தேர்வுகளில் தோல்வி அடைந்தால் ஒருவர் எத்தனை முறை முயற்சி செய்வார்? ஒருமுறை, இருமுறை அல்லது பட்டப்படிப்பு கட்டாயம் தேவை என்றால், 4 அல்லது 5 முறையாக முயற்சி செய்வார்கள். ஆனால் செக்யூரிட்டி கார்டாக வேலை பார்த்து வரும் 56 வயது நபர் ஒருவர் 25 ஆண்டுகள், 23 முறை எம்எஸ்சி கணிம் தேர்வு எழுதியுள்ளார்.
இவர் போன்ற பலரும் இருந்தாலும், ஒரு சில ஆண்டுகள்தான் முயற்சி செய்வார்கள். ஆனால் தொடர்ந்து பட்டம் வாங்க வேண்டும் என்ற இவரது முயற்சி பலருக்கும் மிகப்பெரிய உதாரணமாக இருக்கும்.