தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்.. சென்னையில் இடியுடன் மழை... வானிலை அலெர்ட்
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
