பிபோர்ஜாய் புயல் எதிரொலி: இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, கிழக்கு மத்திய அரபிக் கடலில் அதிதீவிர புயலான பிபோர்ஜாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளை பாதிக்கலாம். குறிப்பாக ஜூன் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு சௌராஷ்டிரா பகுதி முழுவதும் புயல் முன்னெச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் பாவ் நகர், மஹுவா, வெராவல் முதல் போர்பந்தர் பகுதி, ஓகா முதல் ஹாபா வரை மற்றும் காந்திதாம் ஆகியவை அடங்கும்.
