ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்... 5 மணி நேரத்தில் 50 முறை குலுங்கிய 2011-ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜாப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தற்போது ஏற்படுள்ளதுஜப்பானின் மேற்கு கடலோரப்பகுதியில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து கடலோர மாகாணங்களில் சுமார் ஒன்றரை மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் ஏற்பட்டன. 5 மணி நேரத்தில் 50 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், வலுவான கட்டடங்களால் பெரியஅளவில் சேதம் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசு தகவல்கள் தெரிவித்துள்ளனஜப்பானின் மத்திய மேற்கு பகுதியில் ஐப்பான் கடலோரம் உள்ள மாகாணங்களில் ஒன்று இஷிகாவா. இங்குள்ள நோட்டோ என்ற இடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. இதை தொடர்ந்து ஜப்பானின் பிரதான தீவான ஹொன்ஷூவின், டோயாமா, இஷிகாவா, நிகாடா உள்ளிட்ட மாகாணங்களில் 4 ரிக்டர் அளவுக்கு மேலாக 21 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி சரிந்து விழுந்தன. தேசிய நெடுஞ்சாலைகள் பிளந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அலறியடித்து வெளியேறிய மக்கள், திறந்தவெளிகளிலும், சுரங்க ரயில் பாதைகளிலும் தஞ்சமடைந்தனர். சுமார் 33,500 குடும்பங்கள் மின்சாரம் இழந்து தவித்து வருகின்றனர். தொலைதொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டன. மேலும், டோயோமா மற்றும் இஷிகாவாவில் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டனசக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மத்திய மேற்கு கடலோர மாகாணங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, அப்பகுதிகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். டொயாமா, இஷிகாவா மாகாணத்தில் உள்ள வாஜிமா துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒன்றரை மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளதுஇந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்தின் நிலநடுக்க தகவல் திட்ட அதிகாரி அடுத்த 3 நாட்களுக்கு கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தினார். ஜப்பானில் நிலநடுக்கம் வழக்கமான ஒன்று என்ற நிலையில், அதற்கேற்ற தகவமைப்புகளுடன் கட்டடங்கள் கட்டுப்பட்டுள்ளதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என ஜப்பான் வாழ் தமிழரான கண்மணி தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவசர கட்டுப்பாட்டு அறையை ஜப்பானில் இந்திய தூதரகம் திறந்துள்ளது. உள்ளூர் அரசின் அறிவுரைகளை, ஜப்பான் வாழ் இந்தியர்கள் பின்பற்ற அறிவுறுத்தி உள்ள மத்திய அரசு, உதவி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் வெளியிட்டுள்ளதுஜப்பானில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும் இஷிகாவா மாகாணத்தில் இத்தனை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவது முதல் முறை என்று கூறப்படுகிறது.
2011-ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜாப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தற்போது ஏற்படுள்ளது. 2011-ல், ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 20,000 பேர் பலியாகினர். 15 மீட்டர் உயரத்திற்கு ஏற்பட்ட கடல் அலைகள் புகுஷிமா அணு உலைக்குக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின.