பெருங்களத்தூர் சாலையில் மீண்டும் முதலை.. வெளியான அதிர்ச்சி Crocodile |
சென்னை பெருங்களத்தூரில், சாலையில் மேலும் ஒரு முதலை சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுசென்னை பெருங்களத்தூரில் சாலையில் சுற்றித்திரிந்த மேலும் ஒரு குட்டி முதலையின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போனது. வீடுகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் வீடுகளுக்குள்ளே முடங்கினர். மழை வெள்ள பாதிப்புகள் ஒரு புறம் இருக்க சென்னை பெருங்களத்தூரில் குடியிருப்பு பகுதியில் சுமார் 7 அடி நீளம் கொண்ட முதலை சாலையில் சுற்றித்திரியும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதுபின்னர் அந்த முதலை மீண்டும் ஏரிக்குள் சென்றுவிட்டது.
ஒரு சில நாட்கள் கழித்து அந்த முதலை மீண்டும் சாலையில் காணப்பட்டது. அது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை பெருங்களத்தூரில் மீண்டும் ஒரு குட்டி முதலை கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 1.5 அடி நீளம் கொண்ட பிறந்த சில நாட்களே ஆன முதலை சாலையில் சுற்றித்திரியும் வீடியோ வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் முதலையை மீட்டு கிண்டி பூங்காவில் விட்டுள்ளனர்.

image