புத்தாண்டாக ஜனவரி 1 ஆம் தேதி ஏன் கொண்டாடப்படுகிறது? சுவாரஸ்ய தகவல் இதோஜனவரி என்ற பெயர் ரோமர்கள் கடவுளாக கருதும் ஜேனஸ் (Janus) என்பதில் இருந்து உருவானது. இதன்பின்னர் ஜூலியஸ் சீசர் ஆட்சிக்கு வந்தபோது ஏற்கனவே இருந்த நாட்காட்டி முறைகளை மாற்றி அமைத்தார்.
படிக்கவும் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முறை எப்போதிலிருந்து எதனால் தொடங்கியது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜூலியன் காலண்டர் என்று பரவலாக அழைக்கப்படும் கிரிகோரியன் காலண்டரின் அடிப்படையில் புத்தாண்டு தினம் ஜனவரி 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ரோமானியர்கள் சந்திர நாட்காட்டியை பயன்படுத்தியபோது, மார்ச் மாதம் 1 ஆம் தேதிதான் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் கிறிஸ்து பிறப்பதற்கு 153 ஆண்டுகளுக்கு முன்பாக கூடுதலாக சில மாதங்கள் சேர்க்கப்பட்டதால் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு தினமாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறதுஇந்த தேதியை புத்தாண்டாக கொண்டாடும்படி கிரேக்க நாட்டின் வரலாற்றாய்வாளர் ப்ளூடார்க் பரிந்துரை செய்துள்ளார். ரோமர்களின் முதல் அரசனான ரோமுலஸ் ஓர் சிறந்த போர் வீரனாகவும், போர் செய்வதில் ஆர்வம் உடையவனாகவும் இருந்து வந்தான். செவ்வாய் (Mars மார்ஸ்) கிரகத்தின் மகனாக தன்னை அவன் கருதி வந்ததால் மார்ச் மாதம் முதல் நாள் புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டதுமற்றொரு அரசன் நூமா என்பவர் ரோமுலஸிற்கு நேர் எதிரானவர். போரை வெறுத்த அவர் விவசாயத்தின் பக்கம் ஆர்வம் காட்டினார். எனவே அவர் அறுவடையை குறிக்கும் ஜனவரி மாதத்திற்கு முன்னுரிமை கொடுத்து அதன் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடியுள்ளார்.
ஜனவரி என்ற பெயர் ரோமர்கள் கடவுளாக கருதும் ஜேனஸ் (Janus) என்பதில் இருந்து உருவானது. இதன்பின்னர் ஜூலியஸ் சீசர் ஆட்சிக்கு வந்தபோது ஏற்கனவே இருந்த நாட்காட்டி முறைகளை மாற்றி அமைத்தார்கிறிஸ்து பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எகிப்து நாட்டின் சந்திர நாட்காட்டியை அடிப்படையாக கொண்டு ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். அதன்படி ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்படுகிறதுஜூலியன் காலண்டர் நீளமாக இருப்பதை போப் கிரிகோரி மாற்றி அமைத்தார். அதுவே கிரிகோரியன் காலண்டர் என்று அழைக்கப்படுகிறது. இதன்படியும் ஜனவரி 1 ஆம் தேதிதான் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவே தற்போதும் நடைமுறையில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.