மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்.. தமிழக அரசின் அதிரடி திட்டம் சிறு வணிகர்களுக்கு குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன் தொகை ரூ.10,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்காக சிறப்பு கடன் திட்ட முகாம் இன்று தொடங்குகிறதுமிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாலையோரம் கடை வைத்திருந்த சிறு வணிகர்கள் வாழ்வாதாரம் இழந்து கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, சிறு வணிகர்களுக்கான சிறப்பு கடன் திட்ட முகாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று தொடங்கி 12ஆம் தேதி வரை இந்த முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇது தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன்
அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.