ரூ.1000 பொங்கல் பரிசு ரொக்கம் எப்போது கிடைக்கும் தெரியுமா? வெளியான தகவல்தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகை எப்போது வழங்கப்படும் என்று முக்கிய தகவல் வெளியாகியுள்ளதுபொங்கல் பரிசு தொகை ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்குவது வழக்கம். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மக்கள் பொங்கல் தொகுப்பு பொருட்கள் என்னென்ன வரும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பாக சர்க்கரை, பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்போடு சேர்த்து ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த வருடமும் ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், இந்த வருடமும் வழங்கப்படுகிறதுமிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில் பொங்கல் பரிசு வழங்கப்படுமா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதலமைச்சரின் அறிவிப்பு படி பொங்கல் பண்டிகைக்குள் பரிசு தொகை ரேசன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
