ஏறி இறங்குனா கிளாம்பாக்கம்.. தாம்பரத்தில் வருகிறது பிரம்மாண்ட 8 வழி மேம்பாலம்.. சும்மா பறக்கலாம்!
சென்னையில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு வாகனங்கள் எளிதாகவும், விரைவாகவும் செல்லும் வகையில் தாம்பரத்தில் ஏற்கனவே உள்ள மேம்பாலத்தை இடித்துவிட்டு 8 வழி கொண்ட பிரம்மாண்ட மேம்பாலத்தை கட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
சென்னையை ஸ்தம்பிக்க செய்யும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

image