பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் எப்போது விநியோகம்? தமிழக அரசு சொன்ன குட்நியூஸ் Pongal Gift token | தங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பொதுமக்கள் நியாய விலை கடைகளுக்கு சென்று பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்த நிலையில் அதற்கான டோக்கன் விநியோகம் எப்போது என தெரிவிக்கப்பட்டுள்ளதுஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2024ஆம் ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000 நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் வழியாக பாய்ந்தோட காளைகளும் காளையர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.