களைக்கட்டும் ஜல்லிக்கட்டு...!!களத்திற்கு தயாராகும் ஜல்லிக்கட்டு வீரர்கள்...!
Trichy jallikattu | திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டிற்கு தயாராகும் ஜல்லிக்கட்டு வீரர்கள் குறித்த செய்தி தொகுப்பைக் காணலாம்பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் வழியாக பாய்ந்தோட காளைகளும் காளையர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும் பாரம்பரியம், கலாசாரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை களத்தில் சந்திக்க ஜல்லிக்கட்டு வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
திருச்சி அருகே கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த நரி என்கிற முருகானந்தம், இவருக்கு வயது 35. இவர், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டுகளிலும் சுமார் 16 வருடங்களாக பங்கேற்று வருகிறார். இந்த வருடமும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க மிகுந்த ஆர்வமுடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
