சென்னை புத்தக கண்காட்சி செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? உங்களுக்கான அலர்ட் இதோ...
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களை தடுக்க இந்த தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 47-வது சென்னை புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது.
பிரம்மாண்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகக் காட்சியில் அனைத்து விதமான புத்தகங்கள், அனைத்து வயதினருக்குமான புத்தகங்கள் என லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனபுத்தகக் காட்சி வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் வாரநாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 வரையும் வாசகர்கள் அரங்குகளை பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு நுழைவுக்கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதும், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்காக மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்இந்நிலையில், இன்று (ஜன.8) ஒரு நாள் மட்டும் புத்தகக் காட்சிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் அறிவித்துள்ளார்.
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களை தடுக்க இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாளை(ஜன.9) வழக்கம் போல புத்தகக் காட்சி செயல்படும் என்றும் பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
