''தொழில்தொடங்க தமிழ்நாடு சிறந்த மாநிலம்'' - முகேஷ் அம்பானி தமிழ்நாட்டின் முதலீட்டாளர் மாநாடு வெற்றியடைய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி வாழ்த்துகள் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது என ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க இயலாத சூழலில் வீடியோ ஒன்றை முகேஷ் அம்பானி வெளியிட்டார். தமிழ்நாட்டின் முதலீட்டாளர் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள் கூறினார்.

“தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு எப்போதுமே தொழில், கலாச்சாரத்திற்கு சிறந்த மாநிலம். தமிழ்நாடு முழுவதும் ரூ.35 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் குழுமம் முதலீடு செய்துள்ளது. ஏஐ, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் துறைகளில் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளைச் செய்யவுள்ளோம்” என்று பேசினார்.

image