TNGIM 2024 | புதுப்பிக்கத்தக்க சக்தி, வாகனத் துறையில் இவ்வளவு முதலீடுகளாடாடா பவர், லீப் கிரீன், ராயல் என்ஃபீல்டு, அசோக் லேலாண்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனதிருவண்ணாமலையில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திட்டத்தை அதானி நிறுனம் செயல்படுத்தவுள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் Adani Green Energy Limited நிறுவனம், 24,500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் திட்டத்தின் மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 70,000 கோடி அளவுக்கு முதலீடு செய்யும் TATA Power Renewable Energy நிறுவனத்தில் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Leap Green Energy நிறுவனம் தூத்துக்குடியில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் 5,442 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும், இதே நிறுவனம், திருவண்ணாமலையில் 3,325 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 17,400 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. தூத்துக்குடியில் 36,238 கோடி ரூபாய் முதலீடு செய்யும் Sembcorp நிறுவனம் 1,511 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவுள்ளதாகவும், கோவையில் ZF Wind Turbines நிறுவனம் 750 கோடி ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் 225 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறியுள்ளது.
இதே போல, தமிழ்நாட்டின் பல இடங்களில் Shell Markets India நிறுவனம் 1,070 கோடி ரூபாய் முதலீடு செய்வதால் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.