நாட்டிலேயே பெண்களுக்கு மிக பாதுகாப்பான நகரங்களில் சென்னை, திருச்சி பெண்களுக்கான வாழ்வாதாரம், பாதுகாப்பு, பிரதிநிதித்துவம், கல்வியறிவு, மேம்பாட்டு திட்டங்கள், தொழில் திறன் மற்றும் வாய்ப்பு, பணியிடங்களில் பாலின 2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கான சிறந்த நகரங்களாக இருந்தவை எவை எவை என்பது குறித்து தனியார் நிறுவனமான அவதார் குழுமம் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. நாடு முழுவதும், சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஒரு பிரிவாகவும், 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஒரு பிரிவாகவும் மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் கள ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொண்ட 49 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 48.42 சதவீத வாக்குகளை பெற்று சென்னை முதலிடம் பிடித்தது. கோவை நகரம் 9 ஆவது இடத்தையும் மதுரை 11 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
அதே போல, 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட, 64 நகரங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 40.39 சதவீத வாக்குகள் பெற்று திருச்சி முதலிடம் பிடித்தது. வேலூர் நகரம் 2ஆவது இடத்தையும் சேலம் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஈரோடு, திருப்பூர், புதுச்சேரி நகரங்கள் முறையே 7வது, 8வது, 10வது இடங்களை பிடித்துள்ளன.
பெண்களுக்கான வாழ்வாதாரம், பாதுகாப்பு, பிரதிநிதித்துவம், கல்வியறிவு, மேம்பாட்டு திட்டங்கள், தொழில் திறன் மற்றும் வாய்ப்பு, பணியிடங்களில் பாலின சமத்துவம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.