கலைஞர் 100 விழாவில் விஜய், அஜித் பங்கேற்காததற்கு காரணம் இதுதான்... ஜெயக்குமார் விமர்சனம்
கலைஞர் 100 விழாவில் நடிகர் ரஜினி மற்றும் கமல் எழுதிக் கொடுத்ததை படித்தனர்: ஜெயக்குமார்
படிக்கவும் …கலைஞர் நூற்றாண்டு விழாவில் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டை படிக்க சொல்வார்கள் என்பதால், விஜய் மற்றும் அஜித் கலந்து கொள்ளவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ள
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்றார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலை தருவதாக கூறியது என்ன ஆனது என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் அடிப்படையில் பார்த்தால், தற்போது 3 லட்சம் பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும் என்றும், அதற்கான பட்டியல் எங்கே என்றும் வினவினார்.திரைத்துறையினர் நடத்திய கலைஞர் நூற்றாண்டு விழாவில் 899 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதில், நடிகர் ரஜினி மற்றும் கமல், எழுதிக் கொடுத்ததை படித்ததாக ஜெயக்குமார் விமர்சித்தார். இது போன்று, எழுதிக் கொடுத்ததை படிக்க சொல்வார்கள் என்ற காரணத்தால், நடிகர் அஜித் மற்றும் விஜய் கலைஞர் 100 விழாவை புறக்கணித்ததாக ஜெயக்குமார் தெரிவித்தார்.