போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்; பொங்கல் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அதிரடி முடிவுபொங்கல் பண்டிகையையொட்டி 6 ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
படிக்கவும் …காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த வேலை நிறுத்தத்தில் ATP, AITUC, CITU, உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்றுள்ளன. ஆனாலும், தொமுச உதவியுடன் பல இடங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் தற்காலிகமாக பேருந்துகளை இயக்க ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதன் படி, உரிய பயிற்சி பெற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம் பெற்றவர்கள் அசல் ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, உரிய பயிற்சி பெற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம் பெற்றவர்கள் அசல் ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.