பீடா கடைகளில் போதை சாக்லேட்.. 20 ரூபாயில் சீரழியும் தெலங்கானா சிறுவர்கள்!
ஹைதராபாத் அருகே பீடா கடையில் போதை சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்த போலீசார் முடிவுதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பள்ளி மாணவர்களைக் குறி வைத்து போதை மாத்திரைகள் விற்று வந்த கும்பல் போலீசில் சிக்கி உள்ளது.
பள்ளிக்கூடத்திற்கு வெளியே பீடா கடைகளை அமைத்து போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டது அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.ஹைதராபாத்தின் ரங்காரா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு பயின்று வந்த மாணவர்களின் நடவடிக்கைகள் மிகவும் மோசமானதாக மாறியுள்ளது.
வகுப்பறையில் எல்லை மீறி நடந்து கொள்ளுவதுடன் மாணவர்கள் சிலர் ஆசிரியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவர்களின் நடவடிக்கை மாற்றத்திற்கு காரணம் என்ன என விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது பல திடுக்கிடும் சம்பவங்கள் வெட்ட வெளிச்சமானது.
பள்ளிக்கூடத்தின் வெளியே இயங்கி வந்த பீடா கடையில் விற்கும் சாக்லேட்டுகளை வாங்கி சாப்பிடும் மாணவர்களுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவது தெரிய வந்தது. மாணவர்கள் சிலரை வைத்து அந்த சாக்லேட்டுகளை வாங்கி சோதனை செய்து பார்த்த ஆசிரியர்கள் உறைந்து போனார்கள். காரணம், போதை சாக்லேட்டுகளை மாணவர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது.உடனே இது தொடர்பாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை அடுத்து அந்த பீடா கடையில் சோதனை நடத்திய போலீசார், ஏராளமான போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கடை உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், முதலில் மாணவர்களுக்கு இலவசமாகப் போதை சாக்லேட்டுகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் போதைக்கு அடிமையான பிறகு, ஒரு சாக்லேட் 20 ரூபாய் என்று விற்பனை செய்து வந்துள்ளனர்.

image