தலைமைச் செயலாளர் பதவியேற்பு: சிவ்தாஸ் மீனாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்த இறையன்பு
தமிழ்நாட்டின் 49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பதவியேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சிவ் தாஸ் மீனா பதவியேற்ற நிலையில் இரண்டு ஆண்டுகளாக தலைமைச் செயலாளராக பணியாற்றிய இறையன்பு தனது பொறுப்புகளை சிவ்தாஸ் மீனாவிடம் ஒப்படைத்தார்.ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட சிவ்தாஸ் மீனா 1989ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். ஜெய்ப்பூரில் பொறியியல் படிப்பு படித்தவர். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்டவர்.
