ராமர் கோயில் திறப்பு விழா... குடியரசுத் தலைவர் முர்முவுக்கு அழைப்பு!
President Murmu Invited For Ram Temple | குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு-வுக்கு ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில், வரும் 22-ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்க வருமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு-வுக்கு ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ராம்லால், ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிரிபேந்திர மிஷ்ரா ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் அழைப்பிதழை வழங்கினர்.