சென்னை தீவுத்திடலில் தொடங்கியது பொருட்காட்சி.. எத்தனை நாட்கள் தெரியுமா
Exhibition | பொருட்காட்சியில் துறை ரீதியாக அரசின் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது - உதயநிதி ஸ்டாலின்.
சென்னை தீவுத்திடலில் இந்திய சுற்றுலா மற்றும் தொழிற் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.சிறந்த அரங்குகள் அமைத்த துறைகளுக்கு உதயநிதி பரிசுகளை வழங்கினார். சிறைத்துறையின் அரங்கிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
பின்னர், பொருட்காட்சியை உதயநிதி பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தனது பள்ளிப் பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டார். துறை ரீதியாக அரசின் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், 71 நாட்கள் பொருட்காட்சி நடைபெறும் என தெரிவித்தார்.

image