Ayodhya Ram Mandir Live Updates : அயோத்தி ராமர் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா.. ராமர் சிலையை பிரதிஷ்டை செய்கிறார் பிரதமர் மோடி
Ayodhya Ram Mandir Updates : அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. அது தொடர்பான உடனடி தகவல்கள்..அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் இன்று (ஜனவரி 22) நடைபெறுகிறது. ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் மேற்பார்வையில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. ஆகஸ்ட் 5, 2020 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயிலில் பூமி பூஜை செய்தார். அன்று முதல் கோவில் கட்டும் பணி துவங்கியது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மும்முரமாக நடைபெற்று வந்தது. ராமர் கோயில் அசல் வடிவமைப்பு 1988இல் அகமதாபாத்தைச் சேர்ந்த சோம்பூர் குடும்பத்தால் செய்யப்பட்டது. சோம்பூர் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட கோவில்களை குறைந்தது 15 தலைமுறைகளாக வடிவமைத்துள்ளார். சோம்பூர் வாசிகளால் ராமர் கோயில் அசல் வடிவமைப்பிலிருந்து பல மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வடிவமைப்பை 2020 இல் தயார் செய்தனர். 235 அடி அகலமும், 360 அடி நீளமும், 161 அடி உயரமும் கொண்டதாக கோயில் அமைக்கப்படுகிறது.
கோவிலின் தலைமை கட்டிடக் கலைஞரான சந்திரகாந்த் சோம்புராவின் 2 மகன்கள் நிகில் சோம்புரா மற்றும் ஆஷிஷ் சோம்புரா ஆகியோரும் கட்டிடக் கலைஞர்களாக பணியாற்றி வருகின்றனர். இது இந்திய கோவில் கட்டிடக்கலை பாணிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இன்று திறப்பு விழாவும், கும்பாபிஷேக விழாவும் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி முதல் ஏராளமான அரசியல் தலைவர்கள், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்கள், அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்கள், பல்வேறு துறை வல்லுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
