இன்றுடன் நிறைவடைகிறது 47வது சென்னை புத்தகக் கண்Book Fair 2024 | தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நந்தனம் YMCA மைதானத்தில் 47வது புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது.காட்சி!
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறும் 47வது புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நந்தனம் YMCA மைதானத்தில் 47வது புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது.
900 அரங்குகளில் பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டதால் வாசிப்பு பழக்கமுடையவர்கள் ஆர்வமுடன் கண்காட்சிக்கு வந்து செல்கின்றனர்.சிறுகதைகள், நாவல்கள், இலக்கியம் சார்ந்த நூல்கள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்கும் வகையிலான புத்தகங்கள் கிடைப்பதால் சென்னை புத்தக கண்காட்சி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் 8:30 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் வாசகர்கள் அரங்குகளை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த 3 ஆம் தேதி தொடங்கிய 47ஆவது சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது.
