"டேஞ்சர்".. கேரளாவில் கொட்டப்போகும் பேய் மழை.. 'ரெட் அலர்ட்' கொடுத்தாச்சு.. 2018 மாதிரியே இருக்கே
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று இரவு முதலாக மிக மிக கனமழை பெய்யப் போவதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவை சுற்றி போர்வை போர்த்தியுள்ளதை போல கருமேகங்கள் திரண்டு வந்து கொண்டே இருப்பதால் அம்மாநிலத்திற்கு உச்சட்ட எச்சரிக்கையான சிகப்பு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்திலும் பல மாவட்டங்களில் 'சம்பவம்' செய்ய மழை காத்துக் கொண்டிருக்கிறது.
