கடந்த 3 நாட்களாக கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதன் தாக்கமாக, கேரள எல்லைகளான கன்னியாகுமரி மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
இந்நிலையில், கேரளாவில் இன்று இரவு முதல் மழையின் ஆட்டம் தொடங்கப் போவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்றைக்கு இரவு எர்ணாகுளம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மழை தனது கோரத் தாண்டவத்தை ஆடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை இடுக்கியிலும், கண்ணூரிலும் மிக மிக கனமழை கொட்டப் போவதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது
