தமிழகத்தில் மத்திய அரசின் சூப்பர் திட்டம்.. நம்ப முடியாத விலையில் பருப்பு, கோதுமை.. இதை பாருங்க
சென்னை: தமிழகத்திலும் பாரத் பிராண்ட் பெயரில் தரமான பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசின் என்சிசிஎப் அமைப்பு தொடங்கி உள்ளது. ஏற்கனவே இந்த திட்டம் வட இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தமிழகத்திலும் வரவேற்பை பெறும் என தெரிகிறது..
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் பிரிவான இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்) 'பாரத் தால்' என்ற பெயரில், மானிய விலையில் துவரம் பருப்பு விற்பனை செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம், மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதன்படி பருப்பு வகைகள் நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கும் வகையில் பருப்பு வகைகள் 1 கிலோ பேக் ஒன்று கிலோ ரூ. 60க்கும், 30 கிலோ மூட்டை ஒரு கிலோ ரூ. 55 என்ற அடிப்படையில் விற்கப்படும் என்றும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் அஸ்வினி கடந்த ஆண்டு கூறியிருந்தார்
