பனங்கிழங்கு நன்மைகள்..! Palmyra Sprout Benefits in Tamil..!
Pana Kilangu Benefits in Tamil:- ‘கற்பக விருட்சம்’ என்று சொல்லப்படும் பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் கொண்டது. இதில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. பனை மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். இத்தகைய பனங்கிழங்கை நாம் சாப்பிடுவதினால் ஏற்படும் மருத்துவ குணங்களை பற்றி இப்பதிவில் நாம் படித்தறியலாமா..?
மிகவும் ஒல்லியாக உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இந்த பனங்கிழங்கை சாப்பிடுவதினால் உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்கலாம். அது மட்டும் இல்லாமல் உடல் சூட்டினை குறைக்கும்.
எனவே உடல் உஷ்ணத்தினால் உடல் எடை குறையும் அப்படிப்பட்டவர்கள் தினமும் பனங்கிழங்கை சாப்பிட்டு வரலாம்.பலவீனமான கர்ப்பப்பை உள்ள பெண்கள் இந்த பனங்கிழங்கை பவுடர் செய்து தேங்காய் பாலுடன் கலந்து சாப்பிடுவதினால் கருப்பை வலுப்பெறும். இதற்கு என்ன காரணம் என்றால் பனங்கிழங்கில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்து உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்து கொள்ளும்.

image