இனி டிக்கெட் இப்படித்தான்.. பேருந்துகளில் வருகிறது புது ரூல்!
அரசு பேருந்துகளில் தற்போதுள்ள டிக்கெட் வழங்கும் மிஷின்களுக்கு மாற்றாக புதிய தொடுதிரை வசதி கொண்ட டிக்கெட் வழங்கும் இயந்திரம் அறிமுகமாக உள்ளது
மாறி வரும் காலத்துக்கு தகுந்தபடி பொது போக்குவரத்துகளிலும் பல்வேறு புதுமைகளை புகுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதில் ஒரு புதிய அம்சமாக விரைவில் அரசு பேருந்துகளில் தற்போதுள்ள டிக்கெட் வழங்கும் மிஷின்களுக்கு மாற்றாக புதிய தொடுதிரை வசதி கொண்ட டிக்கெட் வழங்கும் இயந்திரம் அறிமுகமாக உள்ளது.

நடத்துனர்களுக்கு ETM மிஷின் எனும் பயணச்சீட்டு கொடுக்கும் மிஷின், இன்னும் 2 மாதங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது , அதுவும் ஆன்டிராய்டு போன் மாதிரியான வடிவமைப்பில் டச் ஸ்கிரீன் வசதியுடன் கையால்வது மிகவும் சுலபமாக இருக்கும் என கூறப்படுகிறது. G pay, phonepe, QR code ஸ்கேன் செய்வது, கடன் மற்றும் டெபிட் அட்டைகள், மூலம் பயணச் சீட்டு வாங்கி பயன் பெறும் வகையில் இந்த புதிய இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதேபோல் ஆவடி, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக 160 பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட இருக்கிறது.

அண்மையில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆவடியில் இருந்து தொலைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில் , தென்மாவட்டங்கள்,மத்திய மேற்கு மாவட்டங்களுக்கு தினமும் 160 பேருந்துகளை மாதவரத்தில் இருந்து இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.

ஆவடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது கோயம்பேடுக்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து பொதுமக்கள் பேருந்துகளை பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவுப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இதே போல் சென்னை ஆட்டோகளின் உரிமங்களை, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும எல்லையான( சி எம் டி ஏ எல்லை)வரை நீடிக்கும் அனுமதி நாளை (ஜனவரி 3அறிமுகப் படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து துறை மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் தகவல் இது பற்றி தகவல் வெளியிட்டுள்ளார்.

எளிமையாக சொல்ல வேண்டுமெனில் இனி சென்னை பர்மிட் பெற்ற ஆட்டோக்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குள் சென்று வர முடியும்.

image