துப்பட்டாவுடன் கூடிய சுடிதார்.. அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு! குமரி கலெக்டர் திடீர் உத்தரவு!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பெண் ஊழியர்கள் சேலை அல்லது 'துப்பட்டாவுடன்' கூடிய சுடிதார் மட்டுமே அணிய வேண்டும் என ஆடை கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உணவு, ஆடை என்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் பல்வேறு இடங்களில் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பப்படும்போது அந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பெண் ஊழியர்கள் சேலை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மட்டுமே அணிய வேண்டும் என ஆடை கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.