காந்தாரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!காந்தாரா படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் காந்தாரா படத்தின் 2 ஆம் பாகத்தை தயாரிக்கவுள்ளது.
காந்தாரா Chapter 1 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. மொத்தமே அதிகபட்சமாக ரூ. 16 கோடி செலவில் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.
படத்தின் திரைக்கதை காட்சியமைப்புகள், சுவாரசியமான காட்சிகள், பின்னணி இசை உள்ளிட்டவற்றால் காந்தாரா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
அதன்பின்னர் இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.இதற்கான பணிகளை தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் தரப்பு மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது காந்தாரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மறுதினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு காந்தாரா 2 என்று பெயர் வைக்காமல் காந்தாரா Chapter 1 என்று பெயர் வைத்துள்ளனர். முதல் பாகத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளதால் அவர்கள் 2ஆம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Read More
image